பாலஸ்தீன கொடியை நீக்க மறுப்பு: நீதிமன்ற தீர்ப்பையும் எதிர்கொள்ள தயாராகும் நகரம்!!
.jpg)
20 புரட்டாசி 2025 சனி 20:12 | பார்வைகள் : 463
மாலகோப் (Malakoff) நகராட்சி, ஹாட்-டி-சென் ஆட்சியரின் கோரிக்கையையும் காவல் துறையினரின் தலையீட்டையும் புறக்கணித்து, நகர மன்றத்தில் பாலஸ்தீனக் கொடியை நீக்க மறுத்துவிட்டது. மேயர் ஜாக்கிலின் பெல்ஹோம் "பிரான்ஸ், பாலஸ்தீனிய அரசை ஐ.நா.வில் அங்கீகரிக்கவிருக்கிறது. அதைக் கொண்டாடவும், சமாதான விழாவை முன்னிட்டு நாங்கள் இந்தக் கொடியை ஏற்றியுள்ளோம் என கூறியுள்ளார்" காவல் துறையினர் கொடியை அகற்றக் கூறியபோதும், மேயர் மறுத்து, போலீசாரின் அறிக்கையிலும் கையெழுத்திடவில்லை.
சனிக்கிழமை, நகரம் எச்சரிக்கையின்றி நிர்வாக நீதிமன்ற விசாரணைக்கு அழைக்கப்பட்டது. நகரம் பதிலளிக்க தயாராகவில்லை என்றும், எதிர்மறையான தீர்ப்பு வந்தால் மேல்முறையீடு செய்யவும் தயார் என்றும் மேயர் தெரிவித்துள்ளார். இதற்கு முந்தியும், ஜெனெவில்லியர்ஸ் நகரத்தில் பாலஸ்தீனக் கொடி அகற்ற இதேபோல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் உக்ரைன் கொடி ஏற்ற நகரங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படாதது "இரட்டை நிலைமை" என நகரத் தலைவர் விமர்சித்தார். தற்போது, மாலகப், பான்யூ (Bagneux), நாந் (Nanterr), உள்ளிட்ட நகரங்கள் செப்டம்பர் 22 அன்று பாலஸ்தீனக் கொடியை ஏற்ற திட்டமிட்டுள்ளன.