இடி மின்னல் - மழை - வெள்ளம் - செம்மஞ்சள் மற்றும் மஞ்சள் எச்சரிக்கை!!

21 புரட்டாசி 2025 ஞாயிறு 06:00 | பார்வைகள் : 381
இன்று செப்டம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னல் தாக்குதல்களுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நேற்று சனிக்கிழமை இடி மின்னல் தாக்குதல்கள் கணிசமான சேதங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்றும் அது தொடர்கிறது. இடி மின்னல் - மழை - வெள்ள அனர்த்தம் காரணமாக மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக Drôme, Vaucluse மற்றும் Bouches-du-Rhône ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ‘செம்மஞ்சள்’ நிறத்தில் விடுக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த இரண்டு நாட்களாக கொட்டித்தீர்க்கும் மழையோடு, இன்றும் மழை பெய்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மேலும் 69 மாவட்டங்களுக்கு இடி மின்னல் மற்றும் மழை காரணமாக மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையில் இல்-பிரான்ஸ்- மாகாணம் இல்லை எனவும், இருந்தபோதும் பிற்பகலின் பின்னர் இலேசான மழைத்தூறலுக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Ain, Allier, Alpes-de-Haute-Provence, Hautes-Alpes, Alpes-Maritimes, Ardèche, Ardennes, Ariège, Aube, Aude, Aveyron, Calvados, Cantal, Charente, Charente-Maritime, Cher, Corrèze, Côte-d'Or, Côtes-d'Armor,Creuse.
Dordogne, Doubs, Drôme, Eure-et-Loir, Finistère, Gard, Haute-Garonne, Gers, Gironde, Hérault, Ille-et-Vilaine, Indre, Indre-et-Loire, Isère, Jura, Landes, Loir-et-Cher, Loire, Haute-Loire, Loire-Atlantique, Loiret.
மற்றும், Lot, Lot-et-Garonne, Lozère, Manche, Marne, Haute-Marne, Meurthe-et-Moselle, Meuse, Morbihan, Moselle, Nièvre, Puy-de-Dôme, Pyrénées-Atlantiques, Hautes-Pyrénées, Pyrénées-Orientales, Rhône ஆகிய 69 மாவட்டங்களுக்கே இந்த மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.