Seine-et-Marne : காவல்துறையினரால் சுடப்பட்டு ஒருவர் பலி!!

21 புரட்டாசி 2025 ஞாயிறு 07:03 | பார்வைகள் : 433
செப்டம்பர் 19 ஆம் திகதி காவல்துறையினரால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். Seine-et-Marne மாவட்டத்தில் உள்ள வீடொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அன்று மாலை வேளையின் போது Souppes-sur-Loing நகரில் உள்ள வீடொன்றில் இருந்து காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். 50 வயதுடைய ஒருவர் மிகவும் ஆக்ரோஷமாக கைகளில் ஆயுதம் ஒன்றை வைத்துக்கொண்டு அவரது குடும்ப அங்கத்தவர்களை மிரட்டிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். குறித்த நபரை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முற்பட்டபோது, அவர் மிகவும் மேலும் ஆக்ரோஷம் அடைந்ததாகவும், காவல்துறையினரை தாக்க முற்பட்டதாகவும் அறிய முடிகிறது.
அதை அடுத்து, காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில் அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
”மிகவும் கிளர்ச்சியடைந்த ஆக்ரோஷமான ஒருவர் கைகளில் வெட்டுக்கத்தி ஒன்றை வைத்துக்கொண்டு தாக்க முற்பட்டார்!” என காவல்துறையினர் அறிக்கையில் குறிக்கப்பட்டுள்ளது.