Paristamil Navigation Paristamil advert login

ஆவணங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய புதிய நடைமுறை: வெளிநாடு செல்வோருக்காக அரசு நடவடிக்கை

ஆவணங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய புதிய நடைமுறை: வெளிநாடு செல்வோருக்காக அரசு நடவடிக்கை

21 புரட்டாசி 2025 ஞாயிறு 11:35 | பார்வைகள் : 129


வெளிநாடு செல்வோர் சமர்ப்பிக்கும் ஆவணங்களின் உண்மைத்தன்மையை, 'ஆன்லைன்' வழியே அறிந்து கொள்ளும் வசதியை, வெளியுறவுத் துறை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, சென்னையில் இயங்கும் வெளியுறவுத் துறை கிளை செயலகத்தின் தலைவர் விஜயகுமார் அளித்த பேட்டி:

வேலை, உயர் கல்வி, தொழில் போன்றவற்றுக்காக ஏராளமானோர் வெளிநாடு செல்கின்றனர். அவ்வாறு செல்வோர், பிறப்பு, கல்வி, திருமண சான்றிதழ் உட்பட பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு முன், அதன் உண்மை தன்மையை, வெளியுறவு அமைச்சகத்தின் வாயிலாக உறுதி செய்து சான்று பெற வேண்டும்.

அவ்வாறு செய்தால் மட்டுமே, அந்த சான்றிதழ்களை வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் ஏற்று கொள்ளும். இதுவரை ஆவணங்களின் உண்மைத்தன்மையை, அரசு அங்கீகாரம் பெற்ற ஏஜன்சி வழியாக பெற வேண்டி இருந்தது.

தற்போது, விண்ணப்பதாரர்கள் அலையாமல், ஆன்லைனில் விண்ணப்பித்தால், அதன் உண்மைத் தன்மையை வெளியுறவு அமைச்சகமே உறுதிப் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இனி வெளிநாடு செல்வோர், தங்கள் ஆவணங்களை, esanad.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்தால் போதும். உண்மைத்தன்மை சான்றை எளிதாக பெறலாம்.

இதை, 140 நாடுகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்