மோடி- சரத் பவார் இடையே தொடரும் அரசியல் நட்பு

21 புரட்டாசி 2025 ஞாயிறு 13:35 | பார்வைகள் : 134
பிரதமர் மோடியும் மஹாராஷ்டிராவின் சீனியர் அரசியல் வாதியுமான சரத் பவாரும் எதிர் அணியில் இருந்தாலும் அவர்களின் நட்பு தொடர்கிறது. ஆனால், பவாரின் கூட்டணியில் உள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் காங்கிரஸ் தலைவர்களும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் மோடியை கடுமையாக விமர்சிக்கின்றனர்.
மோடியின் 75வது பிறந்த நாள் நாடு முழுதும் கொண்டாடப்பட்டது. 75 வயதில் அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என, ஒருமுறை மோடி சொல்லியிருந்தார். ஆனால், பா.ஜ.,வோ இந்த நிபந்தனை மோடிக்கு கிடையாது என சொல்லியுள்ளது.
சில பத்திரிகையாளர்கள் சரத் பவாரை அணுகி, 75 வயதில் அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என ஒருமுறை மோடி சொல்லியிருக்கிறார். இப்போது அவர் 75வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். உங்கள் கருத்து என்ன? என பவாரி டம் கேட்டனர்.
நிச்சயம் ஏதாவது ஏடா கூடமாக பதில் சொல்வார். அதை, 'பிரேக்கிங் நியூஸ்' ஆக்கலாம் என எதிர்பார்த்து காத்திருந்தனர் பத்திரிகையாளர்கள். அதற்கு, 'நானே அரசியலிலிருந்து ஓய்வு பெறவில்லை. அப்படியிருக்க வேறொருவரை ஓய்வு பெறுங்கள் என எப்படி சொல்ல முடியும்?' என்றார் பவார். இதைக் கேட்டு வெறுத்துப் போன பத்திரிகையாளர்கள் இடத்தை காலி செய்தனர்.
பவாருக்கு இப்போது வயது 84. அப்படியிருக்க அவர் எப்படி மோடியை ஓய்வு பெற சொல்லுவார்?
'இண்டி' கூட்டணியில் பவார் கட்சி இருந்தாலும் பல முறை அவருடைய கருத்து கூட்டணி தலைவர்களை பிரச்னையில் ஆழ்த்தியுள்ளது. அதானி குழுமத்தின் மீது புகார் எழுந்த போது, பார்லி., கூட்டுக் ட்டுக் குழு அமைக் அமைக்க வேண்டும் என, இண்டி கூட்டணி மோடிக்கு கோரிக்கை வைத்தது.
ஆனால் பவாரோ, இது தேவையில்லாத விஷயம் என அறிவித்து, இண்டி கூட்டணிக்கு அதிர்ச்சி அளித்தார். அடிக்கடி பவாரை சந்திப்பவர் அதானி என்பது வேறு விஷயம்.