Paristamil Navigation Paristamil advert login

வங்காளதேசத்திடம் இலங்கை அணி அதிர்ச்சி தோல்வி! ஆசியக் கிண்ணத்தில் பாரிய நெருக்கடி

வங்காளதேசத்திடம் இலங்கை அணி அதிர்ச்சி தோல்வி! ஆசியக் கிண்ணத்தில் பாரிய நெருக்கடி

21 புரட்டாசி 2025 ஞாயிறு 09:44 | பார்வைகள் : 117


ஆசியக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்திடம் தோல்வியடைந்ததால் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.


துபாயில் நேற்று நடந்த சூப்பர் 4 போட்டியில் இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. முதலில் ஆடிய இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்கள் சேர்த்தது.

வாணவேடிக்கை காட்டிய தசுன் ஷானகா 37 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் விளாசினார். முஸ்தாபிஃசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளும், மஹெதி ஹசன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

பின்னர் ஆடிய வங்காளதேசம் 19.5 ஓவரில் 169 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. சைஃப் ஹசன் 61 (45) ஓட்டங்களும், டௌஹித் ஹிரிடோய் 58 (37) ஓட்டங்களும் விளாசினர். வனிந்து ஹசரங்கா மற்றும் தசுன் ஷானகா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த தோல்வியின் மூலம் இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றதுடன் -0.121 ரன்ரேட்டையே வைத்துள்ளது.

இதனால் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெறுவதுடன் நல்ல ரன்ரேட்டையும் பெற வேண்டிய நெருக்கடிக்கு இலங்கை அணி தள்ளப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்