70 பேரை கொன்ற வான்வழித் தாக்குதல்- சூடானில் தரைமட்டமான மசூதி

21 புரட்டாசி 2025 ஞாயிறு 11:44 | பார்வைகள் : 214
சூடானில் மசூதி மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 70 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
சூடானின் அல் ஃபாஷர் நகரில் உள்ள மசூதி மீது அந்நாட்டின் துணை ராணுவ குழுவான ரேபிட் சப்போர்ட் ஃபோர்சஸ்(RSF) நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 70 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடந்த இந்த தாக்குதலில் மசூதி முழுவதுமாக சேதமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதல் தொடர்பாக சூடான் ராணுவம் மற்றும் நிவாரண பணியாளர்கள் வெளியிட்ட அறிக்கையில், இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கி இருக்கலாம் என்றும், இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு சர்வதேச தொண்டு நிறுவனங்கள் ஏற்கனவே மோதல் நடைபெறும் இடத்தை விட்டு வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சூடான் ராணுவம் இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.