இது தென் தமிழக வளர்ச்சிக்கு அடித்தளம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

22 புரட்டாசி 2025 திங்கள் 07:48 | பார்வைகள் : 101
கப்பல் கட்டும் தளம் தென் தமிழக வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
துாத்துக்குடி மாவட்டத்தில், 30,000 கோடி ரூபாய் முதலீட்டில் இரண்டு வணிக கப்பல் கட்டும் தளங்களை அமைப்பதற்காக, இரண்டு நிறுவனங்களுடன், தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சங்கப்பாடல்கள் சொல்லும் கப்பற்கலையில் தமிழரின் பெருமைமிகு வரலாற்றை, இப்போது, தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன.தென் தமிழகத்தின் வளர்ச்சிக்குப் புதியதொரு அடித்தளமாக இவை அமையும்.
கப்பற்கலையில் தமிழரின் பெருமைமிகு வரலாற்றை சங்கப்பாடல்கள் சொல்லும். உலக கப்பல் கட்டும் வரைபடத்தில் தென்தமிழகத்தில் திமுக அரசு இடம் பெறச் செய்கிறது. இதன் வாயிலாக வேலைவாய்ப்புகளையும் வளர்ச்சியையும் உருவாக்குகிறது. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.