ஒரே இரவில் ஆயிரம் பேர் கடலைக் கடந்தனர்!!

21 புரட்டாசி 2025 ஞாயிறு 16:52 | பார்வைகள் : 393
பிரான்சில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு 1,000 அகதிகள் பிரித்தானியாவைச் சென்றடைந்துள்ளனர். பிரான்ஸ்-பிரித்தானியா இணைந்து "one in, one out” எனும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு, அதனை நடைமுறைக்கு கொண்டுவந்த இரண்டாம் நாள் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
"one in, one out” ஒப்பந்தம் மூலம் பிரித்தானியாவில் இருந்து சென்ற வியாழக்கிழமை அகதி ஒருவர் பிரான்சுக்கு விமானம் மூலம் திருப்பி அனுப்பட்டார். ஆனால் மறுநாள் இரவில் 13 படகுகளில் 1,072 பேர் (படகு ஒன்றுக்கு சராசரியாக 82 பேர் வரை) பயணித்து பிரித்தானியா சென்றடைந்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டில் இதுவரை 32,103 அகதிகள் பிரித்தானியாவைச் சென்றடைந்துள்ளனர்.
பிரான்ஸ் பிரித்தானியா போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தில் இதுவரை இருவர் மட்டுமே பிரான்சுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், சட்டவிரோத பயணங்கள் அளவு கணக்கில்லாமல் தொடர்வது பிரித்தானிய தரப்பில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.