இந்தியாவுக்கான புதிய மின்சார காரை அறிமுகம் செய்ய Skoda திட்டம்

21 புரட்டாசி 2025 ஞாயிறு 17:49 | பார்வைகள் : 126
ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தைக்காக புதிய மின்சார SUV ஒன்றை உருவாக்கும் திட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
இது ஐரோப்பாவுக்காக வடிவமைக்கப்பட்ட 4.1 மீட்டர் நீளமூக்க Epiq மோதலை விட பெரியதாக இருக்கும் என கூறப்பப்டுகிறது.
இந்த புதிய மொடல் சுமார் 4.5 மேட்டர் நீளமுடையதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்சார வாகனம் CMP21 என்ற பிளாட்பாரத்தில் உருவாக்கப்படும். இது சீனாவில் உருவாக்கப்பட்டு இந்திய சந்தைக்கேற்ப மாற்றப்பட்ட ஒரு தொழில்நுட்ப அடித்தளம்.
இந்த பிளாட்பாரம் மின்சார வாகனங்கள், Plugin Hybrid மற்றும் பாரம்பரிய Hybrid என பல்வேறு powertrain-களை ஆதரிக்கக்கூடியது.
இந்த SUV குடும்ப பயணங்களுக்கு ஏற்ற வகையில் பெரிய இடவசதி மற்றும் சாலையில் வலிமையான தோற்றத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.
இந்த புதிய மொடல் மகாராஷ்டிராவின் சாகன் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும். இது இந்தியாவிற்கு மட்டுமின்றி ஏற்றுமதி சந்தைகளுக்கும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Skoda India 3.0 திட்டத்தின் கீழ், இந்த மொடலுக்காக 1 பில்லியன் யூரோ முதலீடு ஒதுக்கப்பட்டுள்ளது.