பாஜவுக்கு துணை போகும் நபர்களை புறக்கணிக்க வேண்டும்: முதல்வர்

22 புரட்டாசி 2025 திங்கள் 14:47 | பார்வைகள் : 101
பாஜவின் மலிவான சர்வாதிகார அரசியலுக்கு துணை போகும் நபர்களை புறக்கணிக்க வேண்டும்,'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னையில் நடந்த விழாவில் அவர் பேசியதாவது: ஒற்றுமை தான் கொள்கைகளில் வெற்றி பெறுவதற்கு முதல்படி. முஸ்லிம்களுக்கு இடர் வரும்போது உங்களுக்கு துணை நிற்கும் முதல் அரசியல் இயக்கம் திமுக.. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக உண்மையான தோழமை உணர்வோடு போராடியது. திமுக தான். அந்த சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் உள்ளனரா எனக் கேள்வி எழுப்பியவர்களும். அந்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது தடியடி நடத்தியது யார் என்பதும் உங்களுக்கு தெரியும்.
முத்தலாக் சட்டம் கொண்டு வந்த போது அதிமுக இரட்டை வேடம் போட்டதும் தெரியும். அதனால், தான், அன்வர்ராஜா போன்றவர் துரோகத்தின் கூடாரமாக இருக்கும் கட்சிகளை புறக்கணித்துவிட்டு திமுகவில் இணைந்தார்.வக்ப் சட்டத்திலும் அதிமுக கபட நாடகம் போட்டதை அனைவரும் பார்த்தனர். திமுக போராட்டத்தினால் தான் அந்த சட்டத்தின் முக்கிய திருத்தங்களுக்கு தடை வாங்கி உள்ளோம். பாஜவின் மலிவான சர்வாதிகார ஏதேச்சதிகார அரசியலுக்கு துணை செல்பவர்களை புறக்கணிக்க வேண்டும்.
காசாவில் நடத்தப்பட்டு வரும் துயரத்தைப் பார்த்து மனசாட்சி உள்ள யாரும் கவலைப்படாமல் இருக்க முடியாது. இதற்கு விரைவில் ஒரு நல்ல தீர்வு ஏற்பட வேண்டும். இந்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.