ஈஃபிள் கோபுரத்தில் ஒரே நேரத்தில் பாலஸ்தீன - இஸ்ரேல் கொடிகள்!!

22 புரட்டாசி 2025 திங்கள் 08:09 | பார்வைகள் : 530
பாலஸ்தீன அரசை, பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் அங்கீகரித்துள்ளன. ஈஃபிள் கோபுரத்தில் நேற்று இரு நாட்டுக் கொடிகளையும் ஒரே நேரத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.
பாலஸ்தீன கொடியும் - இஸ்ரேல் கொடியும், இரண்டுக்கும் இடையே ஒலிவ் இலையை சுமந்தபடி நிற்கும் சமாதானப்புறா படத்தையும் இராட்சத திரை ஒன்றில் ஒளிரச் செய்யப்பட்டது. பாலஸ்தீன அரசை ஏற்றுக்கொள்வதை பரிஸ் நகரம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது என்பதை குறிக்கும் விதமாக இது காட்சிப்படுத்தப்பட்டதாக பரிஸ் நகரபிதா ஆன் இதால்கோ தெரிவித்தார்.
இரவு 9 மணி முதல் இரவு 11.45 மணி வரை இது காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
ஐக்கியநாடுகள் சபையின் 80 ஆவது மாநாடு இன்று செப்டம்பர் 22 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. அதில் வைத்து பிரான்ஸ் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதை அறிவிக்க உள்ளது. . இஸ்ரேலிய தரப்பில் பெரும் எதிர்ப்பினை இது ஏற்படுத்தியிருந்தபோதும், பல நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டியிருந்தன.