Paristamil Navigation Paristamil advert login

CPL தொடர் - 5 ஆண்டுகளுக்கு பிறகு கிண்ணம் வென்ற ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ்

CPL தொடர் - 5 ஆண்டுகளுக்கு பிறகு கிண்ணம் வென்ற ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ்

22 புரட்டாசி 2025 திங்கள் 09:57 | பார்வைகள் : 113


5 ஆண்டுகளுக்கு பிறகு ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி CPL கிண்ணத்தை வென்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படும் கரீபியன் ப்ரீமியர் லீக் T20தொடர், கடந்த ஆகஸ்ட் 14ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது.

6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டியில், கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டம் ஆடிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ஓட்டங்கள் எடுத்தது.

அதிகபட்சமாக, இப்திகார் அகமது 30 ஓட்டங்களும், பென் மெக்டெர்மாட் 28 ஓட்டங்களும் எடுத்தனர். ட்ரின்பாகோ தரப்பில் சௌரப் நேத்ராவல்கர் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

அதைத்தொடர்ந்து, 131 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ், 18 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்கள் எடுத்தது.

3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி, CPL கிண்ணத்தை வென்றது.

அதிபட்சமாக அலெக்ஸ் ஹேல்ஸ் 26 ஓட்டங்கள் எடுத்தார். 7 பந்துகளில் 16 ஓட்டங்கள் எடுத்து வெற்றிக்கு உதவிய அகேல் ஹோசின் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

13 போட்டிகளில் விளையாடி, 174.09 ஸ்ட்ரைக் ரேட்டில் 383 ஓட்டங்கள் எடுத்துள்ள ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் வீரர் பொல்லார்ட் தொடர் நாயகன் விருது பெற்றார்.  

மேலும், இந்த தொடரில் 30 சிக்ஸ்களுக்கு மேல் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையையும் பொல்லார்ட் பெற்றுள்ளார்.

கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் ஷாய் ஹோப், தொடரின் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 479 ஓட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் இம்ரான் தாஹிர், தொடரில் அதிக விக்கெட்கள் எடுத்தவர்கள் பட்டியலில், 20 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

இம்ரான் தாஹீர் தலைமையிலான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி, 5 ஆண்டுகளுக்கு CPL கிண்ணதை வென்றுள்ளது.

இது அந்த அணியின் 5வது CPL கிண்ணம் ஆகும். முன்னதாக 2015, 2017,2018,2020 ஆகிய CPL தொடர்களில் கிண்ணத்தை வென்றுள்ளது.        

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்