இன்று ஆரம்பமாகிறது இலையுதிர்காலம் (L’automne!) - வெப்பம் தணிகிறது!!

22 புரட்டாசி 2025 திங்கள் 10:19 | பார்வைகள் : 398
இன்று செப்டம்பர் 22 ஆம் திகதி முதல் இலையுதிர்காலம் (L’automne ) ஆரம்பமாகிறது. வெப்பநிலை படிப்படியாக குறைந்து மழைநாட்கள் ஆரம்பமாக உள்ளது.
இந்த பருவாகாலத்தின் முதல் வாரத்தில் நாட்டின் வடக்கு பகுதியில் மிக அடர்த்தியான மழை வீழ்ச்சி பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கிறது. அதேவேளை போதுமான சூரிய ஒளியும் பதிவாகும் எனவும், நண்பகலின் பின்னர் 20 தொடக்கம் 90 மி.மீ மழை வீழ்ச்சியும் பதிவாகும் என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, நாடு முழுவதும், வெப்பம் தணிந்து, மிதமான வெப்பத்துடன் மழைச்சாரல்களுக்கும் வாய்ப்புள்ளதாகவும், பகல்நேரங்களில் அதிகபட்சமாக 24°C வெப்பம் நீஸ் நகரில் பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
தலைநகர் பரிஸ் மற்றும் இல்-து-பிரான்ஸ் மாவட்டங்களில் 16 தொடக்கம் 19°C வரை காலநிலை பதிவாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, வரும் 25 ஆம் திகதி வியாழக்கிழமை இல்-து-பிரான்ஸ் மாகாணம் முழுவதும் பரவலாக மழை எதிர்பார்க்கப்பட்டுள்ளது.