Côtes-d’Armor மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு!!

22 புரட்டாசி 2025 திங்கள் 20:10 | பார்வைகள் : 300
Côtes-d’Armor மாவட்டத்தின் Guingamp பகுதியில் திங்கட்கிழமை 22/09/2025 காலை 55 வயதுடைய பெண் ஒருவர் காரின் உட்பகுதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். வேலைக்கு செல்லும் வழியில் பிளூமாகொயர் (Ploumagoar) பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய அவர் 7.15 மணியளவில் உயிரிழந்ததாக மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறை வீரர்கள் சென்று நடவடிக்கை மேற்கொண்டனர்.
மாவட்டம் முழுவதும் கனமழை காரணமாக 1,500 அவசர அழைப்புகள் பெறப்பட்டு, 400-க்கும் மேற்பட்ட மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம் பொதுமக்களை வெள்ளத்தில் மூழ்கிய சாலைகளில் செல்ல வேண்டாம், நீர்விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம், சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என எச்சரித்துள்ளது. இதற்கிடையில், செயின்ட்-பிரியூ (la cathédrale Saint-Étienne de Saint-Brieuc) நகரின் வரலாற்றுப் பேராலயமும் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.