ஆறாத வடு! - பாலஸ்தீனத்தை அங்கீகரித்தார் மக்ரோன்! - வெளிநடப்புச் செய்த இஸ்ரேலிய பிரதிநிதிகள்!!

22 புரட்டாசி 2025 திங்கள் 22:04 | பார்வைகள் : 535
“யுத்தத்தை நிறுத்தவேண்டிய நேரம் வந்துவிட்டது. பாலஸ்தீன அரசாங்கத்தை நான் அங்கீகரிக்கிறேன்” என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று திங்கட்கிழமை அமெரிக்காவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் வைத்து அறித்தார்.
ஹமாசிடம் இருக்கும் 48 பிணயக்கைகதிகளும் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் எனவும், ’ஒக்டோபர் 7’ தாக்குதல் ஒரு ஆறாத வடு. பயங்கரவாதத்தை நாடுவதை எதுவும் நியாயப்படுத்த முடியாது!” என குறிப்பிட்ட மக்ரோன், ”சட்டம் பலத்தை விட மேலோங்கச் செய்ய வேண்டும்” எனவும், ஹமாசை அரசியல் ரீதியாக அழிக்க முயற்சிக்க வேண்டும் எனவும் மக்ரோன் குறிப்பிட்டார்.
இம்மானுவேல் மக்ரோனின் உரையின் போது இஸ்ரேலிய பிரதிநிதிகளின் இருக்கைகள் காலியாக இருந்தன. அவர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
பாலஸ்தீனத்தில், இஸ்ரேலில் அமைதியைக் கொண்டுவர ‘இருநாடுகள்’ தீர்வு கட்டாயமானதாகும் எனவும் மக்ரோன் குறிப்பிட்டார்