Paristamil Navigation Paristamil advert login

Porte de Bagnolet : RATP பேருந்தை திருடிச்சென்ற அகதி - கைது!!

Porte de Bagnolet  :  RATP பேருந்தை திருடிச்சென்ற அகதி - கைது!!

23 புரட்டாசி 2025 செவ்வாய் 06:00 | பார்வைகள் : 434


RATP இன் பேருந்து ஒன்றை திருடிக்கொண்டு அகதி ஒருவர் 13 கிலோமீற்றர் பயணித்துள்ளார். நேற்று செப்டம்பர் 22, திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

13 ஆம் இலக்க இரவு நேர பேருந்து ஒன்றை பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள Montparnasse தொடருந்து நிறுத்தத்தில் அதிகாலை 5 மணி அளவில் நிறுத்திய சாரதி, சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக பேருந்தை விட்டு இறங்கியுள்ளார். அந்த இடைவெளியில், அகதி ஒருவர் பேருந்தை இயக்கிக்கொண்டு பயணித்துள்ளார்.

சில நிமிடங்கள் கழித்தே பேருந்தை காணவில்லை என்பது சாரதிக்கு தெரியவந்து, RATP கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் பேருந்தின் GPS இணைப்பு மூலம் பேருந்தின் இருப்பிடத்தை அறிந்து அதனை துரத்திச் சென்றனர்.

அகதி மெதுவாகவும், நிதானமாகவும், அனைத்து சமிக்ஞை விதிகளையும் மதித்து மிகவும் இயல்பாக பேருந்தை செலுத்திச் சென்றுள்ளார். மொத்தமாக 13 கிலோமீற்றர் பயணித்த நிலையில் Porte de Bagnolet (15 ஆம் வட்டாரம்) பகுதியில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.

குறித்த பேருந்து Issy-les-Moulineaux (Hauts-de-Seine) தொடக்கம் Bobigny (Seine-Saint-Denis) நகர் வரை இரவு நேரத்தில் இயக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது..
 

வர்த்தக‌ விளம்பரங்கள்