Paristamil Navigation Paristamil advert login

கர்ப்பிணிப் பெண்கள் இந்த வலி நிவாரணியைத் தவிர்க்க வேண்டும்- ட்ரம்ப் கோரிக்கை

கர்ப்பிணிப் பெண்கள் இந்த வலி நிவாரணியைத் தவிர்க்க வேண்டும்- ட்ரம்ப் கோரிக்கை

23 புரட்டாசி 2025 செவ்வாய் 10:16 | பார்வைகள் : 292


ஆட்டிசத்துடன் தொடர்புடையது என்பதால், கர்ப்பிணிகள் Tylenol வலி நிவாரணியை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பொதுவான தடுப்பூசிகளில் பெரிய மாற்றங்களுக்கும் வலியுறுத்தியுள்ளார். 

அமெரிக்காவில் சுகாதாரத்தில் புரட்சியை ஏற்படுத்த வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ள நிலையில், ட்ரம்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மருத்துவம் மற்றும் அறிவியல் துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் நிர்வாகத்தின் முன்முயற்சிகள் குறித்து தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய பாதுகாப்பான வலி நிவாரணிகளில் அசிடமினோஃபெனை மருத்துவ வல்லுநர்கள் நீண்ட காலமாகக் குறிப்பிட்டு வருகின்றனர்.

குறிப்பாக காய்ச்சல் மற்றும் வலி தாய்க்கும் வளரும் கருவுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்ற நிலையில் பரிந்துரைத்துள்ளனர். 

ஆனால் தற்போது Tylenol வலி நிவாரணியை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று ட்ரம்ப் வலியுறுத்துகிறார்.

மருத்துவ ரீதியாக அவசியமில்லாத பட்சத்தில், கர்ப்ப காலத்தில் பெண்கள் டைலெனால் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கடுமையாகப் பரிந்துரைக்கின்றனர்.

கடுமையான காய்ச்சல் இருந்தால் மட்டுமே Tylenol எடுத்துக்கொள்ள அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், எந்த ஆதாரமும் இல்லாமல், குணப்படுத்த முடியாத நோய்களுக்காக பச்சிளம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் எந்த காரணமும் இல்லை என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

12 வயதுக்கு மேல் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் ட்ரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆனால், கல்லீரல் பாதிப்பு மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இந்த நோய் தாய்வழியில் பரவுவதைத் தடுப்பதற்கான சிறந்த வழி, பிறந்த முதல் நாளிலேயே புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதே என்று பல தசாப்தங்களாக உருவாக்கப்பட்ட மருத்துவ கருத்துக்கு எதிரான நேரடி முரண்பாடாக ட்ரம்பின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்