இலங்கையில் இன்று திடீர் அதிகரிப்பைப் பதிவு செய்த தங்க விலை

23 புரட்டாசி 2025 செவ்வாய் 12:16 | பார்வைகள் : 155
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 302,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 279,300 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 34,913 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது