Paristamil Navigation Paristamil advert login

ரவி நடிக்கும் ‘கராத்தே பாபு’ பட ரிலீஸ் எப்போது?….

ரவி நடிக்கும் ‘கராத்தே பாபு’ பட ரிலீஸ் எப்போது?….

23 புரட்டாசி 2025 செவ்வாய் 13:51 | பார்வைகள் : 189


தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவரான ரவி கடைசியாக ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து ‘பராசக்தி’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்தப் படம் 2026 ஜனவரி 14 அன்று திரைக்கு வர இருக்கிறது.

இதற்கிடையில் தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள ரவி, ‘ப்ரோ கோட்’ எனும் திரைப்படத்தை தயாரித்து, நடிக்க இருக்கிறார். மேலும் யோகி பாபுவை வைத்து ‘ஆன் ஆர்டினரி மேன்’ என்ற படத்தை இயக்க உள்ளார். இவ்வாறு சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பிசியாக இருந்து வரும் ரவி ஏற்கனவே ‘கராத்தே பாபு’ எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்தார்.

இந்த படத்தை ‘டாடா’ படத்தின் இயக்குனர் கணேஷ் கே. பாபு இயக்குகிறார்.ரவி நடிக்கும் 'கராத்தே பாபு' பட ரிலீஸ் எப்போது?.... வெளியான புதிய தகவல்!ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க சாம். சி.எஸ் இதன் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். எழில் அரசு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ரவியின் 34வது படமான இந்த படத்தில் தவ்தி ஜிவால், பிரதீப் ஆண்டனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கடந்த பல மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இணையத்தில் செம வைரலானது. அதே சமயம் படப்பிடிப்புகளும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது.ரவி நடிக்கும் 'கராத்தே பாபு' பட ரிலீஸ் எப்போது?.... வெளியான புதிய தகவல்!அதாவது இந்த படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு தான் படப்பிடிப்பை படக்குழுவினர் விறுவிறுப்பாக நடத்தி வந்தனாராம்.

ஆனால் ரவி தற்போது தயாரிப்பில் பிசியாக இருப்பதால் கராத்தே பாபு படத்தின் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாமல் இருக்கிறதாம். அதனால் இந்த படத்தின் ரிலீஸ், அடுத்த ஆண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்