Paristamil Navigation Paristamil advert login

பாலுவிடம் குறுக்கு விசாரணை செய்ய தயாராகும் அண்ணாமலை

பாலுவிடம் குறுக்கு விசாரணை செய்ய தயாராகும் அண்ணாமலை

24 புரட்டாசி 2025 புதன் 13:04 | பார்வைகள் : 103


தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை மீது தொடர்ந்த அவதுாறு வழக்கு தொடர்பாக, தி.மு.க., - எம்.பி., டி.ஆர்.பாலுவிடம், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், இரண்டு மணி நேரத்திற்கு மேல், குறுக்கு விசாரணை நடந்தது.

தமிழக பா.ஜ., தலைவ ராக அண்ணாமலை இருந்தபோது, கடந்த, 2023, ஏப்.,14ல், 'டி.எம்.கே., பைல்ஸ்' என்ற பெயரில், பலரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். செய்தியாளர்களிடம் பேசுகையில்,''தி.மு.க., பொருளாளரும், எம்.பி.,யுமான டி.அர். பாலுவுக்கு, 21 நிறுவனங்கள் இருப்பதாகவும், அவருக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாகவும்' கூறினார். இதையடுத்து, அண்ணாமலை மீது, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாலு அவதுாறு வழக்கு தொடர்ந்தார் .

இந்த வழக்கு தொடர்பாக, சென்னை சைாதப்பேட்டை 17வது பெருநகர மாஜிஸ்திரேட் முன், நேற்று பாலு ஆஜரானார். அப்போது அண்ணாமலை தரப்பில், மூத்த வழக்கறிஞர் பால் கனகராஜ், பாலுவிடம் குறுக்கு விசாரணை செய்தார்.

இது குறித்து, பால் கனகராஜ் அளித்த பேட்டி:

தமிழக பா.ஜ., தலைவராக இருந்த அண்ணாமலை, சமூக வலைதளம் மற்றும் மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சக தரவுகளின் அடிப்படையில், 'டி.எம்.கே., பைல்ஸ்' என்ற பட்டியலை வெளியிட்டார். அவர், செய்தியாளர்கள் முன் வைத்த ஆதாரங்களின் அடிப்படையில், நேற்று காலை, 11:30ல் இருந்து, மதியம், 2:15 மணி வரை, பாலுவிடம் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது. நேரமின்மை காரணமாக, குறுக்கு விசாரணை, அக்.,13க்கு தள்ளி வைக்கப்பட்டது. அன்றைய தினம், பாலுவிடம் நான் குறுக்கு விசாரணை செய்யலாமா என, அண்ணாமலை என்னிடம் கேட்டார். அதற்கு சட்டத்தில் இடம் உண்டு என, அவரிடம் தெரிவித்து உள்ளேன். அன்று அவரும் நீதிமன்றத்தில் ஆஜராவார். இவ்வாறு அவர் கூறினார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்