Paristamil Navigation Paristamil advert login

மிதமான உடற்பயிற்சியே ஆரோக்கியத்தை தரும்

மிதமான உடற்பயிற்சியே ஆரோக்கியத்தை தரும்

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9570


 உடற்பயிற்சி என்றாலே பெரும்பாலானவர்கள் சொல்லும் அறிவுரை “நடப்பது” தான். தினமும் அரை மணி நேரம் நடந்தால் போதும், உடலின் அனைத்து உறுப்புகளும் இயங்கும், உடல் சுறுசுறுப்படையும், தேவையற்ற கொழுப்பு குறையத் துவங்கும் என்றெல்லாம் மக்கள் பயன்களை அடுக்குவதுண்டு. 

 
நிமிடத்திற்கு சராசரியாக நூறு அடிகள் எடுத்து வைத்து நடப்பதே அளவான மிதமான உடற்பயிற்சி, இந்த வேகத்தில் தினமும் முப்பது நிமிடங்கள் நடப்பது சரியான உடற்பயிற்சி என்கின்றனர் ஆய்வாளர்கள். 
 
எதிர்பார்க்கும் பயன் கிடைக்க வேண்டுமெனில் ஆண்களின் நடை வேக விகிதம் நிமிடத்துக்கு 92 அடிகள் முதல் 102 அடிகள் வரை இருக்க வேண்டும் எனவும் , பெண்களுக்கு 91 முதல் 115 வரை இருக்க வேண்டும் எனவும் அவர்களுடைய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. 
 
97 பேரை வைத்து நடத்திய இந்த ஆராய்ச்சி இறுதி முடிவாக, ஆண்களோ, பெண்களோ நிமிடத்துக்கு சுமார் நூறு அடிகள் எடுத்து வைத்து நடப்பது நல்லது எனும் முடிவை எட்டியிருக்கிறது. இந்த ஆராய்ச்சி ஆரோக்கியமான மக்களை வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. 
 
ஆரோக்கியம் குறைவானவர்களோ, மிக அதிக எடை கொண்டவர்களோ அதற்கு ஏற்றார்போல் நடையின் வேகத்தை மிதப்படுத்தலாம் என்கிறார். தொடர்ந்த உடற்பயிற்சி எப்போதுமே நல்லது. அதுவும் நீச்சல், நடை போன்றவை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை. 
 
உடல் நலம் செம்மையாக இருந்தால் தான் மனமும் வளமுடன் இயங்கும். உடற்பயிற்சியினால் உடலிலுள்ள இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் ஆகியவை சீராக ஓடுகின்றன. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்