சற்று முன் : பரிஸ் : கழுத்து துண்டாக்கப்பட்டு பெண் படுகொலை!!

24 புரட்டாசி 2025 புதன் 11:30 | பார்வைகள் : 791
பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் பெண் ஒருவர் கழுத்து வெட்டப்படு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அப்பெண்ணின் கணவர் சம்பவ இடத்திலேயே வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று செப்டம்பர் 24, புதன்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Passage des Tourelles கட்டிடத்தொகுதி ஒன்றில் உள்ள வீடொன்றில் இருந்து காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு வயது குறிப்பிடப்படாத பெண் ஒருவரை அவரது கணவர் கொலை செய்துள்ளார், வாக்குவாதம் கத்திக்குத்தில் முடிவடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திலேயே நின்றிருந்த அவரது கணவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.