Paristamil Navigation Paristamil advert login

ஒரே நாளில் ரிலீஸாகும் சூர்யாவின் ‘கருப்பு’ vs கார்த்தியின் ‘சர்தார் 2’?

ஒரே நாளில் ரிலீஸாகும் சூர்யாவின் ‘கருப்பு’ vs கார்த்தியின் ‘சர்தார் 2’?

24 புரட்டாசி 2025 புதன் 15:25 | பார்வைகள் : 175


ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் ‘கருப்பு’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க, சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். படத்தில் கதாநாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் நட்டி நட்ராஜ், ஸ்வாஸிகா மற்றும் ஆர் ஜே பாலாஜி உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.

சமீபத்தில் படத்தின் டீசர் வீடியோ வெளியாகி கவனம் ஈர்த்தது. படத்தில் சூர்யா கருப்பு என்று சிறு தெயவமாகவும், வழக்கறிஞராகவும் இரண்டு கதாபாத்திரங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டாலும் ஓடிடி மற்றும் சேட்டிலைட் வியாபாரம் நடக்காததால் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என ஒரு தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் சூர்யாவின் தம்பி கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘சர்தார் 2’ திரைப்படமும் ரிலீஸுக்கு அதே தேதியைதான் குறிவைத்து வேலைகள் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இது உறுதியாகும் பட்சத்தில் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரின் படங்கள் முதல் முறையாக ஒரே நாளில் ரிலீஸாகும் சூழல் உருவாகியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்