Paristamil Navigation Paristamil advert login

Yvelines : தொடருந்து நிலையம் முன்பாக கொலை! - 23 வயது நபர் கைது!!

Yvelines : தொடருந்து நிலையம் முன்பாக கொலை! - 23 வயது நபர் கைது!!

24 புரட்டாசி 2025 புதன் 18:00 | பார்வைகள் : 2435


Yvelines மாவட்டத்தில் உள்ள Trappes
தொடருந்து நிலையம் முன்பாக இடம்பெற்ற தாக்குதலில் 20 வயதுடைய இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளார். 23 வயதுடைய தாக்குதலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று செப்டம்பர் 23, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணி அளவில் தொடருந்து நிலையம் முன்பாக குறித்த இரு நபர்களுக்கிடையே வாக்குவாதம் எழுந்தது. அதை அடுத்து இருவரும் தாக்கிக்கொண்டனர். கத்தியாக் குத்தப்பட்டதில் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டார்.

காவல்துறையினர் அழைக்கப்பட்டு, தாக்குதலாளி கைது செய்யப்பட்டார். மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சைகள் அளித்தும் தாக்குதலுக்கு இலக்கானவரைக் காப்பாற்ற முடியவில்லை.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டது. இருவரில் ஒருவர் போதைப்பொருள் விற்பனையாளர் எனவும், ஒருவர் போதைப்பொருள் பாவனையாளர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்