Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் நிலவில் கால் பதிக்கவிருக்கும் நாசா- 2026 தொடக்கத்தில் Artemis 2 திட்டம்

மீண்டும் நிலவில் கால் பதிக்கவிருக்கும் நாசா- 2026 தொடக்கத்தில் Artemis 2 திட்டம்

25 புரட்டாசி 2025 வியாழன் 10:53 | பார்வைகள் : 112


அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASA, 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திரனை நோக்கி மனிதர்களுடன் பயணிக்க திட்டமிட்டுள்ளது.

Artemis 2 எனப்படும் இந்த மிஷன், 2026 பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை பல்வேறு நாள்களில் ஏவுதலுக்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளது.

முதற்கட்டமாக, பிப்ரவரி 5-ஆம் திகதி இரவு ஏவப்படலாம் என நாசா தெரிவித்துள்ளது.

இந்த மிஷன், நாசாவின் மனிதர்களை அனுப்பும் Artemis திட்டத்தின் முதல் முயற்சியாகும்.

Reid Wiseman (commander), Victor Glover (pilot), Christina Koch (mission specialist), மரம் கனடாவைச் சேர்ந்த Jeremy Hansen (mission specialist) ஆகிய நான்கு விண்வெளி வீரர்கள் Artemis விண்கலத்தில் 10 நாட்கள் சந்திரனை சுற்றி பயணிக்க உள்ளனர்.


அவர்கள் சந்திரனின் சுற்றுப்பாதையில் 9,260 கிமீ தூரம் சென்று சந்திரனின் இறங்காமல் பூமிக்கு திரும்புவார்கள்.

2022-ல் நடந்த Artemis 1மிஷன் வெற்றிகரமாக சந்திர சுற்றுப்பயணத்தை முடித்தது. ஆனால், அது பூமிக்கு திரும்பும்போது வெப்பக்கவசம் எதிர்பார்த்ததை விட அதிகமாக எரிந்ததால், Artemis 2 திட்டம் 2024-ல் இருந்து 2026-க்கு ஒத்திவைக்கப்பட்டது.


இந்தப் பிரச்சினையை தீர்க்க நாசா புதிய பாதையை தேர்ந்தெடுத்துள்ளது.

இந்த மிஷனுக்கான ரொக்கெட் மற்றும் விண்கலம் தயாராகி வருகிறது. SLS ரொக்கெட் நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள வாகன தொகுப்பு கட்டிடத்தில் உள்ளது.

Orion விண்கலம் விரைவில் தயாராகும். அக்டோபரில் முழுமையாக இணைக்கப்பட்ட ரொக்கெட் வெளியிடப்படும்.

இந்த மிஷன், எதிர்கால சந்திர தரையிறக்கத்திற்கும், ஆழமான விண்வெளி ஆராய்ச்சிக்கும் அடித்தளமாக அமையும் என நாசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்