Paristamil Navigation Paristamil advert login

பொது கழிப்பறையை பூட்ட வேண்டாம் - அர்ச்சுனா விடுத்த கோரிக்கை

பொது கழிப்பறையை பூட்ட வேண்டாம் - அர்ச்சுனா விடுத்த கோரிக்கை

25 புரட்டாசி 2025 வியாழன் 14:54 | பார்வைகள் : 162


பாராளுமன்றத்தில் இன்று ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, பாராளுமன்றத்தில் பொது கழிப்பறையை பூட்டுப்போட்டு பூட்டவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

 "பாராளுமன்றத்தில் உள்ள எங்கள் பொது கழிப்பறை 4:30 மணிக்கு மூடப்படும் என்று பொலிஸார் கூறுகிறார்கள்.

கழிப்பறையில் உள்ள உபகரணங்களை கழற்றி எடுத்துச் செல்வதாகக் கூறியே  அதை அப்படியே மூடுவதாக தெரிவிக்கின்றனர்.  

அதன் பிறகு அவர்களுக்கு எங்கும் செல்ல முடியாது. எனவே, இரவில் கூட பொது கழிப்பறையை திறந்து வைக்கச் சொல்ல  சொல்லுங்கள்," என்று அர்ச்சுனா கூறினார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்