Paristamil Navigation Paristamil advert login

சமந்தா மறுமணம் செய்யப் போகிறாரா ?

சமந்தா மறுமணம் செய்யப் போகிறாரா ?

25 புரட்டாசி 2025 வியாழன் 15:53 | பார்வைகள் : 808


கடந்த 2023ம் ஆண்டில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி என்ற படத்தில் நடித்த சமந்தா அதன் பிறகு இந்த ஆண்டு சுபம் என்ற படத்தை தெலுங்கில் தயாரித்தார். அதோடு சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் சமீபகாலமாக ஹிந்தி வெப் சீரிஸ்களில் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் தன்னை வைத்து ‛தி பேமிலி மேன், சிட்டாடல்' போன்ற வெப் சீரிஸ்களை இயக்கிய ராஜ் நிடிமொருவை சமந்தா காதலித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. அதோடு கோவில், ஷாப்பிங்களுக்கும் இருவரும் கைகோர்த்தபடி சென்று வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது ராஜ் நிடிமொருவை விரைவில் சமந்தா திருமணம் செய்து கொள்ளப் போவதாக பாலிவுட் ஊடகங்களில் ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியிருக்கிறது. அதேசமயம் தனது காதல் குறித்து தொடர்ந்து ஊடகங்கள் செய்து வெளியிட்டு வரும் நிலையில் அதற்கு சமந்தா இதுவரை எந்த ஒரு மறுப்பு செய்தியை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்