நாட்டுக்கோழி ரசம்

25 புரட்டாசி 2025 வியாழன் 16:53 | பார்வைகள் : 108
தொற்று காரணமாக யாருக்கு எப்போது சளி பிடிக்கிறது என்பதே கண்டறிய முடியவில்லை. முன்பெல்லாம் பருவநிலை மாறும்போதுதான் சளி பிடிக்கும். ஆனால் தற்போது கொரோனா வேரியண்டுகளின் பரவல் அதிகரித்துவிட்டதால் எப்போது வேண்டுமென்றாலும் சளி பிடிக்க ஆரம்பித்துவிடுகிறது. அதிலும் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பவர்களுக்கு அடிக்கடி இந்த சளி தொல்லைதான். இவர்களுக்கெல்லாம் சூப்பரான உணவுதான் இந்த நாட்டுக்கோழி ரசம். இதை நாங்கள் சொல்லும் பக்குவத்தில் சமைத்து சாப்பிட்டு பாருங்கள். மறுநாளே சளி, இருமல் பறந்து போகும்.
தேவையான பொருட்கள் :
நாட்டுக்கோழி - 5 துண்டு
எண்ணெய் - 2 Tbsp
தக்காளி - 2
கடுகு - 1 tsp
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1 tsp
காய்ந்த மிளகாய் - 3
மிளகு - 1 Tbsp
சீரகம் - 1 Tbsp
பூண்டு - 5 பல்
சின்ன வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
நாடுக்கோழிகளை உரலில் நன்கு இடித்து எடுத்துகொள்ளுங்கள்.
அடுத்து கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி பின் கடுகு கைவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.
பின் சின்ன வெங்காயத்தை இடித்து போடுங்கள். அதோடு மிளகு , சீரகம், பச்சை மிளகாய் , பூண்டு, தக்காளி ஆகியவற்றையும் இடித்து அதையும் கடாயில் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக இடித்த சிக்கனை சேர்த்து போதுமான அளவு தண்ணீர் சேர்த்து அதோடு மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்துவிடுங்கள்.
இறுதியாக போதுமான உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் கமகமவென சூடான சிக்கன் ரசம் தயார்.
இதை சளி, இருமல் சமயத்தில் சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.