Paristamil Navigation Paristamil advert login

அஜித்தின் 65ஆவது பட இயக்குனர் இவரா?

அஜித்தின் 65ஆவது பட இயக்குனர் இவரா?

25 புரட்டாசி 2025 வியாழன் 16:53 | பார்வைகள் : 161


அஜித் நடிப்பில் கடைசியாக ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் இப்படத்தை இயக்கியிருந்தார் ஆதிக். இருப்பினும் ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. ஆனால் அஜித்தின் கேரியரில் அதிக வசூலை வாரி குவித்த படம் என்ற பெயரை இப்படம் பெற்றது. இது தவிர அஜித்தின் ‘ஏகே 64’ படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப்போகிறார் என்று சமீபகாலமாக பேச்சு அடிபடுகிறது.

அதன்படி இந்த படம் தொடர்பான முன் தயாரிப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் 2025 நவம்பர் மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் அஜித்தின் 65ஆவது படம் குறித்த புதிய அப்டேட் கிடைத்திருக்கிறது. அதாவது ஏகே 65 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அஜித்தின் 65ஆவது படத்தை ‘மார்கோ’ படத்தின் இயக்குனர் ஹனீஃப் அடேனி இயக்க உள்ளார் என்றும் இது தொடர்பான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹனீஃப் அடேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான ‘மார்கோ’ திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் நிறைந்திருந்தது. இருப்பினும் படத்தின் மேக்கிங், ஆக்சன் ஆகியவை ரசிகர்களை கவர்ந்தது. எனவே ஹனீஃப் அடேனி, அஜித்தை வைத்து எந்த மாதிரியான படம் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்