மெட்டி அணிவது ஆரோக்கியமானதா?

25 புரட்டாசி 2025 வியாழன் 16:53 | பார்வைகள் : 160
நமது திருமணச் சடங்குகளில் மெட்டி அணிவித்தல் என்பது ஒரு முக்கியமான பாரம்பரியமாகும். முன்பு ஆண்கள் மத்தியிலும் இந்த வழக்கம் இருந்தபோதிலும், காலப்போக்கில் பெண்களுக்கான சடங்காகவே இது நிலைபெற்றுவிட்டது.
பெண்கள் பொதுவாக காலின் இரண்டாவது விரலில் தான் மெட்டி அணிகிறார்கள். இந்த விரலில் இருந்து ஒரு குறிப்பிட்ட நரம்பு கருப்பை வழியாக இதயத்திற்கு செல்கிறது. மெட்டி அணிவதால் இந்த நரம்பு தூண்டப்பட்டு, கருப்பை வலுப்பெறுவதாகவும், ரத்த ஓட்டம் சீரடைவதாகவும் கூறப்படுகிறது. இதனால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறையும் என நம்பப்படுகிறது.
மெட்டி பெரும்பாலும் வெள்ளியால் செய்யப்படுகிறது. வெள்ளி, பூமியின் துருவ ஆற்றல்களை ஈர்த்து, அதை உடல் முழுவதும் செலுத்தும் சக்தி கொண்டது. இதனால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
இத்தகைய அறிவியல் மற்றும் ஆரோக்கியப் பலன்கள் இருப்பதால்தான், திருமணம் முடிந்த பெண்கள் மெட்டி அணிவது மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது. இது திருமணமான பெண்ணின் அடையாளத்தைத் தாண்டி, அவரது உடல் ஆரோக்கியத்திற்கும் துணைபுரிகிறது.