ரஜினி – கமல் படத்தின் இயக்குனர் யார்?
25 புரட்டாசி 2025 வியாழன் 16:53 | பார்வைகள் : 914
தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிப்பு ஜாம்பவான்களான ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கப்போவதாக சமீபகாலமாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனை இருவருமே தனித்தனியே உறுதி செய்துள்ளனர். ஆனால் இயக்குனர் மட்டும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
ஆனாலும் ஆரம்பத்தில் லோகேஷ் கனகராஜ் இவர்களது படத்தை இயக்கப்போவதாகவும் அந்த படம் கேங்ஸ்டர் படமாக இருக்கும் எனவும் சொல்லப்பட்டது. அடுத்தது லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்க வாய்ப்பு இல்லை. பிரதீப் ரங்கநாதன் இதை இயக்க இருக்கிறார் என பல தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இருப்பினும் ரஜினி – கமல் படத்தின் இயக்குனர் குறித்து குழப்பங்கள் நீடித்துக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் யார் இயக்கினால் என்ன? ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரையும் ஒரே திரையில் கண்டால் போதும் என்று படத்தை திருவிழா போல் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அடுத்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் 2027 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த படம் வெளியாகும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்குள் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் தங்களின் கமிட்மெண்ட்களை முடித்துவிட்டு இந்த புதிய படத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இனிவரும் நாட்களில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் நம்பப்படுகிறது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan