Paristamil Navigation Paristamil advert login

டென்மார்க்கில் விமான நிலையங்களில் அடையாளம் தெரியாத ட்ரோன்கள் தென்படுவதாக தகவல்

டென்மார்க்கில்  விமான நிலையங்களில் அடையாளம் தெரியாத ட்ரோன்கள் தென்படுவதாக தகவல்

25 புரட்டாசி 2025 வியாழன் 17:54 | பார்வைகள் : 203


டென்மார்க்கின் பல விமான நிலையங்களில் அடையாளம் தெரியாத ட்ரோன்கள் ட்ரோன் தென்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து ஆல்போர்க் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூன்று சிறிய விமான நிலையங்களில்  வியாழக்கிழமை (25) அதிகாலை ட்ரோன்கள் தென்பட்டதாக, டேனிஷ் பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

இருப்பினும் ஏனைய விமான நிலையங்கள் மூடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


டென்மார்க்கின் முக்கிய விமான நிலையமான கோபன்ஹேகன் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில், வணிக மற்றும் இராணுவ விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் ஆல்போர்க் விமானநிலையமும் தற்போது மூடப்பட்டுள்ளது.

எஸ்டோனியன், போலந்து மற்றும் ருமேனிய வான்வெளியில் ட்ரோன்கள் மற்றும் விமானங்களுடன் தொடர்புடைய, அண்மைய சம்பவங்கள், ரஷ்யா நேட்டோ பாதுகாப்புகளை சோதித்து வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்தன.

இதன் பின்னணியில் உள்ளவர்களை விசாரித்து வருவதாகவும், ஒரு வேடிக்கையான என்பதை நிராகரிக்க முடியவில்லை எனவும் டென்மார்க் பொலிஸ் தெரிவித்துள்ளது.


வடக்கு டென்மார்க்கில், ஜட்லாண்ட் பகுதியில் அமைந்துள்ள, மக்கள்தொகை அடிப்படையில் நாட்டின் நான்காவது பெரிய நகரமான ஆல்போர்க் விமான நிலையத்திற்கு அருகில் ஒன்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்கள் காணப்பட்டதாக பொலிஸ் அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது.

ஆல்போர்க்கில் ட்ரோன்கள் தென்பட்ட சம்பவங்கள், திங்கற்கிழமை, கோபன்ஹேகன் விமான நிலையத்தில் 4 மணி நேரம் விமானங்களை நிறுத்தியதை போன்று இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்காண்டிநேவியாவின் விமான நிலையமொன்றின்  அருகில் பெரிய மற்றும் அடையாளம் தெரியாத பல ட்ரோன்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆல்போர்க் விமான நிலையம் மூடப்பட்டமையானது, டென்மார்க்கின் ஆயுதப் படைகளைப் பாதித்துள்ளது.

ஏனெனில் அது ஒரு இராணுவ தளமாகப் பயன்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆளில்லா விமானங்களின் நோக்கம் என்ன, அதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது மிக விரைவில் அறியமுடியும் என பொலிஸார் தெரிவித்ததாக சர்வதேச ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

விசாரணைகளில் அந்த நாட்டின் மற்றும் தேசிய பெரிஸாருக்கு உதவுவதாக டென்மார்க் ஆயுதப் படைகள் தெரிவித்துள்ளன. ஆனால் மேலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்