அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி: டிஆர்டிஓ சாதனைக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு

26 புரட்டாசி 2025 வெள்ளி 05:29 | பார்வைகள் : 101
அக்னி பிரைம் ஏவுகணையை வெற்றிகரமாக டிஆர்டிஓ சோதனை செய்தது. டிஆர்டிஓ விஞ்ஞானிகளை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார்.
2 ஆயிரம் கி.மீ தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது அக்னி பிரைம் ஏவுகணை. இந்த ஏவுகணை முதல் முறையாக ரயில் மீதான மொபைல் லாஞ்சரிலிருந்து ஏவப்பட்டது. இந்த சோதனை வெற்றி அடைந்தது. இந்த சாதனையை டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு விஞ்ஞானிகள் நிகழ்த்தி இருக்கின்றனர்.
ரயிலில் இருந்து ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்டாக நாடாக இந்தியா மாறியது. வெற்றிகரமாக அக்னி பிரைம் ஏவுகணை சோதனை செய்த டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார். இது குறித்து சமூக வலைதளத்தில் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ரயில் மீதான மொபைல் லாஞ்சரிலிருந்து அக்னி ஏவுகணை சோதனை நிகழ்த்தப்பட்டது. இந்த ஏவுகணை 2000 கிமீ வரை சென்று தாக்கும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ரயில் மீதான மொபைல் லாஞ்சரிலிருந்து இன்று மேற்கொள்ளப்பட்ட முதல் ஏவுகணை சோதனை சிறப்பாக செய்யப்பட்டது.
இந்த ஏவுகணையின் வெற்றிகரமான சோதனைக்கு டிஆர்டிஓ, மற்றும் ஆயுதப்படைகளுக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றிகரமான சோதனை இந்தியாவை ரயில் மீதான மொபைல் லாஞ்சரிலிருந்து ஏவுகணைகள் ஏவும் திறன் கொண்ட நாடாக மாற்றி உள்ளது. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.