40 ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பரில் பரிசில் கடும் குளிர்ச்சி!!

25 புரட்டாசி 2025 வியாழன் 18:06 | பார்வைகள் : 810
பரிஸ் நகரில் செப்டம்பர் மாதத்தில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குளிர் பதிவாகியுள்ளது. செப்டம்பர் 24, 2025, புதன்கிழமையன்று அதிகபட்ச வெப்பநிலை 10.9°C ஆக இருந்தது, இது 1986க்கு பிறகு பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த வெப்பநிலையாகும். இந்த நாளை பரிசில் செப்டம்பர் மாதத்தில் வரலாற்றிலேயே நான்காவது மிகக் குளிர்ந்த நாளாக Météo France அறிவித்துள்ளது.
கடந்த வாரம் வெப்பநிலை 30°C-ஐத் தாண்டிய நிலையில், இவ்வளவு விரைவில் வெப்பநிலை இத்தனை குறைந்திருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக, காலநிலை மாற்றத்தால் குளிர்ந்த பருவங்கள் தற்போது குறைவாகவும், மென்மையாகவும் உள்ளன. எனினும், இந்த வருடம் சில அபூர்வமான குளிர்ச்சியான நாட்கள் காணப்பட்டுள்ளன. இவ்வார இறுதியில் வெப்பநிலை மீண்டும் 17°C-18°C ஆக உயரும், மற்றும் அடுத்த வாரம் 20°C வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது பருவத்திற்கேற்ற சாதாரண நிலையாகும்.