ஆப்பிரிக்க கடற்கரையில் பிரெஞ்சு கடற்படையால் கிட்டத்தட்ட 10 டன் கோகோயின் பறிமுதல்!!

25 புரட்டாசி 2025 வியாழன் 19:06 | பார்வைகள் : 618
பிரெஞ்சு கடற்படை, மேற்கு ஆப்பிரிக்காவின் கடற்கரையோரத்தில் அனுமதி இன்றி சென்ற ஒரு மீன்பிடி படகில் சோதனை நடத்தி, அதில் 9.6 டன் கொகைன் பறிமுதல் செய்துள்ளதனர்.
இந்த நடவடிக்கை கொரிம் இயக்கத்தின் ஒரு பகுதியாகும், இது கடல் கொள்ளையும் போதைப்பொருள் கடத்தலையும் தடுக்கும் நோக்கில் கினியா வளைகுடாவில் பிரான்சின் இராணுவம் நடத்திய ஒரு முக்கிய நடவடிக்கையாகும். பறிமுதல் செய்யப்பட்ட கொகைனின் மதிப்பீடு சுமார் 519 மில்லியன் யூரோக்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் சமீபத்தில் அதிகரித்து வருகின்றன; கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் மட்டும், இதே பகுதியில் 5.9 டன் கொகைன் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. பிரெஞ்சு கடற்படை இதை ஒரு "சிறப்பான பிடிப்பு" எனக் குறிப்பிட்டு, தேசிய மற்றும் சர்வதேச சக்திகளுக்கு இடையிலான சிறப்பான ஒத்துழைப்பால் இது சாத்தியமானதாக தெரிவித்துள்ளது.