உலகளாவிய பணியாளர் தேவையை புறக்கணிக்க முடியாது: ஜெய்சங்கர்

26 புரட்டாசி 2025 வெள்ளி 12:35 | பார்வைகள் : 128
எச் 1பி விசா கட்டணம் உயர்விற்கு மத்தியில், ''உலகளாவிய பணியாளர்களின் தேவையை புறக்கணிக்க முடியாது'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறைமுகமாக கூறியுள்ளார்.
வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக வழங்கப்படுகிறது, எச்1பி விசா. இதை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. சமீபத்தில் இந்த விசாவுக்கான கட்டணத்தை, 88 லட்சம் ரூபாயாக உயர்த்தி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இதனால் இந்தியர்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
இந்நிலையில் நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பேசியதாவது: ஒரு யதார்த்தம் உள்ளது. இந்த யதார்த்தத்திலிருந்து நீங்கள் தப்பிக்க முடியாது. பல நாடுகள் தங்கள் சொந்த மக்களிடமிருந்து தொழிலாளர் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. உலகளாவிய பணியாளர்களின் தேவையை புறக்கணிக்க முடியாது. இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.