ட்ரம்பிற்கு நோபல் பரிசு கிடைக்குமா...? நிபுணர்கள் தகவல்

26 புரட்டாசி 2025 வெள்ளி 10:02 | பார்வைகள் : 171
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அமைதிக்கான நோபல் பரிசினை பெற டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஆர்வமாக இருக்கிறார்.
இதற்காக, இந்தியா - பாகிஸ்தான் சண்டையை வீழ்த்தியதுடன் பல போர்களை நிறுத்தியதாக அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில், ட்ரம்பிற்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிபுணர்களின் கூற்றுப்படி, ஆரம்பத்தில் உக்ரைன், ரஷ்யா போரை நான் நிறுத்துவேன் என்று ட்ரம்ப் கூறினார். அதற்காக தீவிரமாக செயல்பட்ட அவர் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
ஆனால், தற்போது இருநாட்டு தலைவர்களுடனும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் போர் முடிவுக்கு வரவில்லை. இதன் காரணமாக ட்ரம்பிற்கு நோபல் பரிசு கிடைக்காது.
இதற்கிடையில், இந்த ஆண்டு நோபல் பரிசு கமிட்டி குழுவினர் அமைதிக்கான நோபல் பரிசினை, ஏதாவது ஒரு மனிதாபிமானம் சார்ந்து செயல்படக் கூடிய அமைப்புக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.