பத்து ஆண்டுகளில் 61 பில்லியன் யூரோக்கள் சேமித்த - இல்-து-பிரான்ஸ் மாகாண சபை!!

26 புரட்டாசி 2025 வெள்ளி 10:50 | பார்வைகள் : 438
வளிமாசடைவுக்கு எதிரான போராட்டத்தில் இல்-து-பிரான்ஸ் மாகாண சபை கடந்த 10 ஆண்டுகளில் 61 பில்லியன் யூரோக்களை சேமித்துள்ளது.
2010 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டுவரையான வருடங்களில் இந்த தொகையை சேமித்ததாக தெரிவிக்கப்படுகிறது. வளிமண்டல மாசடைவை கண்காணிக்கும் Airparif நிறுவனம் இத்தகவலை இன்று செப்டம்பர் 26, வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
அதேவேளை, உயிரிழப்புக்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 2010 ஆம் ஆண்டில் வளிமாசடைவு காரணமாக 10,350 பேர் உயிரிழந்த நிலையில், 2019 ஆம் ஆண்டில் அது 6,220 பேராக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருந்தபோதும், வளிமாசடைவை கட்டுப்படுத்த செலவிடப்படும் தொகை தொடர்ந்தும் அதிகமாகவே உள்ளதாகவும், வருடத்துக்கு 28 மில்லியன் யூரோக்கள் எனவும், இல்-து-பிரான்சுக்குள் வசிப்போருக்கு வருடத்துக்கு 2,200 யூரோக்கள் அரசு செலவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.