Paristamil Navigation Paristamil advert login

முதல் இந்திய வீரராக BBL தொடரில் இணைந்த அஷ்வின்

முதல் இந்திய வீரராக BBL தொடரில் இணைந்த அஷ்வின்

26 புரட்டாசி 2025 வெள்ளி 12:02 | பார்வைகள் : 110


BBL தொடரின் சிட்னி தண்டர்ஸ் அணியில் அஷ்வின் இணைந்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின், ஐபிஎல் தொடரில் CSK அணிக்காக விளையாடி வந்தார்.

இதனையடுத்து, கடந்த மாதம் ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த அஷ்வின், வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாட உள்ளதாக அறிவித்தார்.

இதற்காக, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ILT20 தொடர் ஏலத்திற்கு தனது பெயரை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

மேலும், அவுஸ்திரேலியாவில் நடைபெற உள்ள பிக்பாஸ்(Big Bash)T20 லீக் தொடரில், அஷ்வினை விளையாட வைப்பதற்காக அவுஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.


இதில், பல்வேறு அணிகள் அஷ்வினை தங்கள் அணிக்குள் இழுக்க ஆர்வம் காட்டி வந்தன.

இந்நிலையில், சிட்னி தண்டர் அணியில் அஷ்வின் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆனால், எத்தனை ஆண்டுகால ஒப்பந்தம், என்ன தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

இது குறித்து பேசிய அஷ்வின், "சிட்னி தண்டர் அணி என்னை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து தெளிவாக உள்ளது. அவர்களிடம் நடத்திய உரையாடல் சிறப்பாக அமைந்தது.

டேவிட் வார்னருடன் இணைந்து விளையாட ஆவலாக உள்ளேன். சிட்னி தண்டர் ரசிகர்களுக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்" என தெரிவித்துள்ளார்.


இது குறித்து பேசிய சிட்னி தண்டர் அணி மேலாளர் டிரென்ட் கோப்லேண்ட், "அஷ்வின் சிட்னி தண்டர் அணியை தேர்ந்தெடுத்தது மிக பெருமையாக உள்ளது. அஷ்வினின் ஆர்வம், வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை எங்களை வெகுவாக கவர்ந்தது.

அவர் களத்தில் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சை வழங்குவார். அவரின் இருப்பு, இளம்வீரர்களுக்கு ஒரு வழிகாட்டியாக மதிப்புமிக்கதாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

டேவிட் வார்னர் சிட்னி தண்டர் அணியின் அணித்தலைவராக உள்ளார். 15வது BBL தொடர் வரும் டிசம்பர் 14 ஆம் திகதி தொடங்கி, ஜனவரி 26 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்