பரிஸ் : காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க - சென் நதியில் குதித்த நபர்!!

26 புரட்டாசி 2025 வெள்ளி 13:45 | பார்வைகள் : 413
போதைப்பொருள் விற்பனை செய்யும் ஒருவர், காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க, சென் நதிக்குள் பாய்ந்துள்ளார். அவரை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
புதன்கிழமை பிற்பகல் இச்சம்பசவம் பரிஸ் 4 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. போதைப்பொருள் விற்பனையாளர் ஒருவர், அங்குள்ள Rue de l'Hôtel-de-Ville வீதியில் நின்றுகொண்டு, வாடிக்கையாளர் ஒருவரது குரல்பதிவை தொலைபேசியில் கேட்டுக்கொண்ட நிலையில், அவரை காவல்துறையினர் சூழ்ந்துள்ளனர். அதை அடுத்து அவர் தப்பி ஓடியுள்ளார்.
ஓடிச்சென்ற அவர், தப்பிக்கும் நோக்கில் சென் நதிக்குள் பாய்ந்துள்ளார். ஆனால் துரதிஷ்ட்டவசமாக அவர் குளிர்ந்த நீரில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில், அவரை காவல்துறையினர் மீட்டு, கைது செய்தனர்.