வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்றவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

26 புரட்டாசி 2025 வெள்ளி 14:02 | பார்வைகள் : 169
41 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள "குஷ்" போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு சென்று கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு சென்ற இலங்கை பயணி ஒருவர், வியாழக்கிழமை இரவு விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
ரத்மலானை பகுதியில் மணல் மற்றும் சரளை விநியோகிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள 48 வயதான தொழிலதிபர் ஆவார்.
அவருக்கு எதிராக கல்கிசை, கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் தலைமையகத்தால் போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் மூன்று பதிவு செய்யப்பட்டுள்ளன.
தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்துநேற்று இரவு 06.30 மணிக்கு இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-405 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
அவர் தனது சூட்கேஸில் "ஷாப்பிங்" பையில் 418 கிராம் "குஷ்" என்ற போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தார்.
இந்த போதைப்பொருளுடன் அவர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) ஆஜர்படுத்தப்பட்டார், அங்கு அவர் ஒக்டோபர் 08 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.