பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் களமிறங்கும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

26 புரட்டாசி 2025 வெள்ளி 14:32 | பார்வைகள் : 162
ஒவ்வொரு வருடமும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதுவரை வெற்றிகரமாக 8 சீசன் முடிவடைந்துள்ள நிலையில், 9-ஆவது சீசன் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க உள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றிய பேச்சு அடிப்பட துவங்கிய மறுகணமே... இந்த முறை யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என்கிற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழ துவங்கிவிட்டது. அதே போல் பல பிரபலங்களின் பெயர்கள் பிக்பாஸ் சீசன் 9 போட்டியாளர்களின் உத்தேச பட்டியலில் உள்ளது.
குறிப்பாக சீரியல் நடிகை ஜனனி, பாரதி கண்ணம்மா ஃபரினா ஆசாத், நடிகர் சித்து, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பட்டி மன்ற பேச்சாளர் மஞ்சுநாதன் உட்பட சில பிரபலங்கள் பெயர் தொடர்ந்து அடிபட்டு வருகிறது. இவங்களை தொடர்ந்து இந்த லிஸ்டில், இரண்டு புதிய பிரபலங்களின் பெயர் இணைந்துள்ளது.
ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில், ஒவ்வொரு புதன் கிழமையும் 4 எபிசோடுகள் வீதம் ஒளிபரப்பாகி வரும், முக்கிய வெப் தொடர் தான் ஹார்ட் பீட். இளம் மருத்துவர்களை சுற்று கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இந்த தொடரின் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேப்பை தொடர்ந்து, இந்த தொடரின் இரண்டாவது பாகம் சமீபத்தில் துவங்கியது. அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த தொடரில் நடித்து வரும் இரண்டு பிரபலங்கள் தான் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க உள்ளனர்.
அதாவது, பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முக்கிய ரோலில் நடித்து வந்த பாடினி (அனிதா) கிட்ட தட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது. அதே போல் கார்த்திக்குமாரின் (விஜய்) சிறு வயது காதாபாத்திரத்தில் நடித்த ரோஷனும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க உள்ளாராம். பிக்பாஸ் துவங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், வித்தியாசமான புரோமோக்களை வெளியிட்டு நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பையும் கூடி வருகிறது விஜய் டிவி.