மீல் மேக்கர் ஃபிரை

26 புரட்டாசி 2025 வெள்ளி 15:32 | பார்வைகள் : 108
புராட்டி மாதம் என்பதால் வீட்டில் அசைவம் இருக்காது. சண்டே ஆனாலே அசைவம் சாப்பிட்டு பழக்கிய வாய்க்கு ருசியான சிக்கன் , மட்டன் இல்லையே என வருத்தப்படுவோருக்குதான் இந்த ரெசிபி.. டிரை பண்ணி பாருங்க..
தேவையான பொருட்கள் :
மீல் மேக்கர் - 100 கிராம்
வறுத்து அரைக்க :
மிளகு - 1 tsp
சீரகம் - 1 tsp
சோம்பு - 1tsp
தனியா - 1tsp
மிளகாய் - 1 tsp
பட்டை - 1 tsp
ஏலக்காய் -1 tsp
கடல் பாசி - 1 tsp
தாளிக்க :
எண்ணெய் - 2டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 tsp
கறிவேப்பிலை - சிறிதளவு
சின்ன வெங்காயம் - 5
காஷ்மீர் மிளகாய் தூள் - 1 tsp
மஞ்சள் தூள் - 1/2 tsp
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 tsp
கரம் மசாலா தூள் - 1/2 tsp
உப்பு - தே. அ
செய்முறை :
முதலில் மீல் மேக்கரை சுடு தண்ணீரில் வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ளவற்றை கடாயில் எண்ணெய் இல்லாமல் சேர்த்து வறுத்து அரைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள்.
பின் கடாய் வைத்து எண்ணெய் சேர்த்து சீரகம், கறிவேப்பிலை , சின்ன வெங்காயம் , காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.
பின் இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போக வதக்குங்கள்.அடுத்ததாக மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்ததும் மீல் மேக்கரை சேர்த்து பிரட்டிக்கொள்ளுங்கள்.
தேவையான அளவு உப்பு அதோடு அரைத்த பொடி சேர்த்து நன்கு கிளறிவிடுங்கள்.கொஞ்சம் தண்ணீர் தெளித்து 5 நிமிடம் தட்டு போட்டு மூடி விடுங்கள்.
பின் நன்கு கிளறி இறக்கிவிடுங்கள். அவ்வளவுதான் சுவையான மீல் மேக்கர் ஃபிரை தயார்.