பாடகர் Johnny Hallyday இன் ஆவணப்படம் தயாராகிறது!!

26 புரட்டாசி 2025 வெள்ளி 16:40 | பார்வைகள் : 192
புகழ்பெற்ற பிரெஞ்சுப் பாடகர் Johnny Hallyday இன் வாழ்க்கை வரலாற்றை கொண்ட ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடகர் Johnny Hallyday தொடர்பில் இதுவரை நாம் பாத்திராக காட்சிகள் பலவற்றை இந்த ஆவணப்படம் கொண்டுள்ளதாகவும், மேடை நிகழ்ச்சியின் பின்னணி சம்பவங்களையும், மேடை நிகழ்ச்சிகளுக்காக தயாராகும் பயிற்சி காணொளிகளையும், ஒலிப்பதிவு கூடங்களில் அவர் பாடும் காட்சிகளையும் கொண்டு இந்த ஆவணப்படம் தயாராகிறது.
இயக்குனரும், Johnny இன் நெருங்கிய நண்பருமான Michel Jankielewicz இந்த ஆவணப்படத்தை இயக்குகிறார். அவர் 1996 ஆம் ஆண்டு Johnnyஇன் பாடலான L'hymne à l'amour இனை இயக்கியிருந்தார்.
இந்த ஆவணப்படத்துக்காக 1,000 மணிநேரங்கள் கொண்ட காணொளிகள் உள்ளதாகவும், அதில் இருந்து சிறப்பான தேவையான காட்சிகளை தொகுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி அன்று தனது 74 ஆவது வயதில் நுரையீரல் புற்றுநோய் காரணமாக Johnny Hallyday உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.