Paristamil Navigation Paristamil advert login

மெற்றோவில் இருந்து அதிவேக தொடருந்துக்கு மாறும் Jean Castex !! - மக்ரோன் பரிந்துரை!!

மெற்றோவில் இருந்து அதிவேக தொடருந்துக்கு மாறும் Jean Castex !! - மக்ரோன் பரிந்துரை!!

26 புரட்டாசி 2025 வெள்ளி 17:40 | பார்வைகள் : 500


RATP நிறுவனத்துக்கு பொறுப்பதிகாரியாக உள்ள முன்னாள் பிரதமர் Jean Castex, விரைவில் அங்கிருந்து SNCF நிறுவனத்தின் பொறுப்பதிகாரியாக மாற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் அவர் முடிவினை இதுவரை எடுக்கவில்லை என்றபோதும், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அவரை பரிந்துரை செய்துள்ளார். SNCF இன் தற்போதைய பொறுப்பதிகாரியாக உள்ள Jean-Pierre Farandou, விரைவில் ஓய்வினை அறிவிக்க உள்ளார். அதை அடுத்து அவரது இடத்தை நிரப்புவதற்காகவே முன்னாள் பிரதமர் பரிந்துரைக்கப்பட்டார்.

”ஒரு அறிவாளிக்கு பதிலாக இன்னொரு அறிவாளி வருவார்” என குறிப்பிடப்பட்டு, இன்று செப்டம்பர் 26, வெள்ளிக்கிழமை மக்ரோன் அவரை பரிந்துரை செய்தார்.

RATP நிறுவனத்தின் பொறுப்பதிகாரியாக Jean Castex பதவியேற்ற பின்னர் அதன் மொத்த வருவாய் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்