எகிப்தில் ஆடைத் தொழிற்சாலையொன்றில் தீ விபத்து- 8 பேர் பலி

26 புரட்டாசி 2025 வெள்ளி 19:03 | பார்வைகள் : 173
வடக்கு எகிப்தில் ஆடைத் தொழிற்சாலையொன்றில் வெள்ளிக்கிழமை(26) காலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர் என எகிப்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கர்பியா கவர்னரேட்டில் உள்ள மஹல்லா அல் குப்ராவின் யமானி பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு 26 நோயாளர் காவு வண்டி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த 35 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு விசேட மருத்துவ குழுக்கள் சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதால், 15 நோயாளர் காவு வண்டிகள் சம்பவ இடத்தில் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக எகிப்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.