கல்வியில் தமிழகம் இந்தியாவிற்கே முன்னோடி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

27 புரட்டாசி 2025 சனி 06:37 | பார்வைகள் : 100
கல்வியில் தமிழகம் இந்தியாவிற்கே முன்னோடி என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சென்னையில் நடந்த கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு நன்றி. தெலுங்கானாவில் அடுத்த கல்வியாண்டில் இருந்து காலை உணவு திட்டம் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு நன்றி.
இந்த அறிவிப்பு நிகழ்வை உண்மையிலேயே அற்புதமாக்கியது. புதுமைப் பெண், நான் முதல்வன், மற்றும் தமிழ்ப்புதல்வன் போன்ற எங்கள் முதன்மைத் திட்டங்களைப் பாராட்டியதன் மூலம், கல்விப்பாதையில் தமிழகம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வழிகாட்டி என்பதை நீங்கள் மீண்டும் உறுதிப்படுத்தினீர்கள்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1