மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்திய ஜிஎஸ்டி சீர்திருத்தம்: பாசிட்டிவ் சுனாமி என்கிறது மாருதி நிறுவனம்

27 புரட்டாசி 2025 சனி 08:39 | பார்வைகள் : 102
ஜிஎஸ்டி சீர்திருத்தம் வாகனத்துறையில் ஒரு பெரிய நேர்மறையான சுனாமியை ஏற்படுத்தி உள்ளது என மாருதி நிறுவனத்தின் உயர் அதிகாரி கூறியுள்ளார்.
30 ஆயிரம் கார்கள் விற்பனை
மத்திய அரசு ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளதால் கார்கள், பைக், வீட்டு உபயோக பொருட்கள், உணவு மற்றும் மருந்து பொருட்கள் என அனைத்து பொருட்களின் விலையும் சரிந்துள்ளது. அதிலும் குறிப்பாக வாகனங்களின் விலை, கணிசமாக குறைந்துள்ளது. ஒவ்வொரு கார் உற்பத்தி நிறுவனமும், தங்கள் விலைகுறைப்பு பட்டியலை வெளியிட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர். விலை குறிப்பு அமலுக்கு வந்த 22ம் தேதி முதல் டாடா உள்ளிட்ட நிறுவனங்களின் கார்கள் விற்பனை அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி குறைப்பு எதிரொலி காரணமாக நவராத்திரிக்கு முதல்நாளான செப்.,22 ம் தேதியன்று மாருதி நிறுவனத்தின் 30 ஆயிரம் கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
சுனாமி
இந்நிலையில் மாருதி சுசூகி நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவின் மூத்த நிர்வாக அதிகாரி பார்த்தோ பானர்ஜி ஏஎன்ஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: எங்களது நிதி கூட்டாளிகள் விரைவில் கடன் வழங்கும் பணியை முடிப்பதில் தீவிரமாக உள்ளனர். விநியோக உத்தரவையும் விரைவாக வழங்குகின்றனர். இதன் மூலம் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக கார்களை வழங்க முடியும். இதற்கு முக்கிய காரணம் ஜிஎஸ்டி சீர்திருத்தம். இந்த நடவடிக்கை நாடு முழுவதும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நேர்மறையான சுனாமியை உண்டாக்கி உள்ளது கடந்த ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி குறைப்பு குறித்து தகவல் அறிந்ததும், கார்களை வாங்கும் எண்ணத்தில் இருந்தவர்கள் தங்களது முடிவை ஒத்திவைத்தனர். தற்போது பண்டிகை காலம் நெருங்குவதாலும் கார்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதிகரிப்பு
முன்பு, ஒரு நாளைக்கு 10 ஆயிரம் கார்கள் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது 18 ஆயிரம் கார்கள் முன்பதிவு செய்யப்படுகிறது. சிறிய கார்களிலும் முன்பதிவு அதிகரித்துகாணப்படுகிறது. 100க்கும் மேற்பட்ட நகரங்களில் நல்ல பலன் தெரிகிறது. முன்பதிவு இருமடங்கு அதிகரித்துள்ளது. சிறிய கார்களின் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. மெட்ரோபோலிட்டன் நகரில் சிறிய கார்களின் விற்பனை 35- 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
இப்போது இந்தியாவில் ஆயிரத்தில் 34 பேர் மட்டுமே கார்வைத்துள்ளனர். இன்னும் அதிகம் பேர் கார் வாங்க வேண்டும் என்பதற்காக எளிதாக கடன் வசதி திட்டத்தை கொண்டு வர உள்ளோம். மாதம் ரூ.1,999 மட்டும் இஎம்ஐ செலுத்தும் வகையில் கார் கடன் திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1