Paristamil Navigation Paristamil advert login

அமைச்சு பிரதிநிதிகள் அறிவிக்கப்படவில்லை!- ஐந்தாம் குடியரசில் அதிகநாட்களை எடுத்துக்கொண்ட பிரதமர் !!

அமைச்சு பிரதிநிதிகள் அறிவிக்கப்படவில்லை!- ஐந்தாம் குடியரசில் அதிகநாட்களை எடுத்துக்கொண்ட பிரதமர் !!

27 புரட்டாசி 2025 சனி 07:00 | பார்வைகள் : 383


நாட்டின் புதிய பிரதமராக கடந்த செப்டம்பர் 9 ஆம் திகதி பொறுப்பேற்றுக்கொண்ட பிரதமர் Sébastien Lecornu, இதுவரை அவரது அமைச்சர் பிரதிநிதிகளை அறிவிக்கவில்லை.

இன்று சனிக்கிழமையுடன் அவர் பதிவேற்று 18 நாட்கள் ஆகின்றன. இதுவரை அமைச்சர்கள் பட்டியல் தயாரிக்கப்படவில்லை எனவும், ஐந்தாம் குடியரசில் பிரதமர் ஒருவர் அரசாங்கத்தை நியமிக்க அதிக நாட்களை எடுத்துக்கொண்ட பிரதமராகவும் மாறியுள்ளார்.

முன்னதாக மிஷல் பார்னியே அவர்கள் செப்டம்பர் 5 ஆம் திகதி பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டு, அடுத்த 16 நாட்களில் (செப்டம்பர் 21) தனது அமைச்சர்கள் பட்டியலை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் பிரான்சுவா பெய்ரூ, பத்தி நாட்களில் அமைச்சர்களை தெரிவு செய்து அறிவித்திருந்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்